எங்கள் புத்தகங்கள்
விடுபட்டவை
கதைகள், கவிதைகள், சமூக ஊடகப் பதிவுகள், பத்திரிகைக் கட்டுரைகள் என பல வடிவங்களில் எழுதப்பட்டிருக்கும் கிரீஷின் இந்த எழுத்துகள் தொகுப்பாக தமக்கென ஒரு கதையாடலை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. காதல், அரசியல், சமூக ஊடகங்கள், சினிமா என பல்வேறு தளங்களில் பல ஒருபாலீர்ப்பாளர்களின் திருநர்களின் பங்களிப்புகள், சித்தரிப்புகள் அதன் அரசியல் குறித்த ஒடுக்கப்பட்ட ஒரு குரலின் வெளிப்பாடாகவும்...மேலும் தகவலுக்கு...
சென்னையில் பால்புதுமையினர் - குயர் சென்னை க்ரோனிக்கிள்ஸ் தொகுப்பு
எங்கள் இரண்டாவது புத்தகம் சென்னை அல்லது சென்னையைச் சார்ந்த பால்புதுமையினர் வாழ்க்கையை விவரிக்கும் ஒரு தொகுப்பு. இந்த புத்தகம் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியாகும். வாழ்க்கையில் வெவ்வேறு பாதைகளில் இருந்து வரும் மக்கள் சென்னையோடு தங்களை எவ்வாறு அடையாளப்படுத்தி கொள்கிறார்கள் என்பதோடு சென்னையோடு அவர்களுடைய வாழ்க்கை ஊடுபாவும் கதைகளை இந்த தொகுப்பில் பகிர்ந்து கொள்கிறார்கள். இந்த புத்தகம் சிறு கதைகள், கட்டுரைகள் மற்றும் காமிக் கீற்றுகள் வடிவத்தில் வெளியாகும்.- புத்தகத்திலிருந்து.
நண்பர்களுக்கு
ட்ரான்ஸ்*பாண்டர் அமைப்பால் உருவாக்கப்பட்ட ஆதரவாளர்களுக்கான குறிப்பேடு நண்பர்களுக்கு என்று குயர் சென்னை க்ரோனிகிள்ஸால் தமிழில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது, ஆங்கிலம் தமிழ் இருமொழிகளிலிருக்கும் இந்த 16 பக்க குறிப்பேடு உங்கள் பயணத்தில் உடனிருக்கும் குயர் நண்பர்களுக்கு ஆதரவளிக்க உதவும்.